5-வது போட்டியிலும் வங்கதேசம் வெற்றி
19 Aug 2009
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் வங்கதேச அணி வெற்றி பெற்று தொடரை 4- 1 என்று கைப்பற்றியுள்ளது. ஜிம்பாப்வே 209 ரன்களுக்கு சுருண்டது. வங்காள தேச அணி 47.5 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
வங்காளதேசம் - ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி புலவாயோவில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 46.4 ஓவர்களில் 209 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதிகபட்மாக பிரன்டன் டெய்லர் 61 ரன்னும், பிரைஸ் 46 ரன்னும் எடுத்தனர்.
முந்தைய மோதலில் 194 ரன்கள் விளாசிய சார்லஸ் கவன்ட்ரி டக்-அவுட் ஆனார். வங்காளதேசம் தரப்பில் டோலார் மக்முத் 4 விக்கெட்டும், சையத் ரசல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய வங்காளதேச அணி 47.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. 2 ரன்னில் தனது முதல் சதத்தை தவற விட்ட முஷ்பிகிர் ரகிம் 98 ரன்கள் விளாசினார்.
ஆட்ட நாயகனாக வங்கதேச வீரர் டோலர் மஹ்மூதும், தொடரின் நாயகனாக வங்கதேச துவ்க்க வீரர் தமீம் இக்பாலும் தேர்வு செய்யப்பட்டனர்.